அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..


Song: Amma Endrazhaikaatha  
Singer: K.J.Yesudas
Music: Ilaiyaraaja
Lyrics: Vaali


அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..
அம்மாவை வணங்காது உயர்வில்லையே..
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..
அம்மாவை வணங்காது உயர்வில்லையே..
நேரில் நின்று.. பேசும் தெய்வம்..
பெற்ற தாய் அன்றி வேறொன்று ஏது..
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..
அம்மாவை வணங்காது உயர்வில்லையே..

அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதான் அம்மா..
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நான்தான் அம்மா..
பொருலோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாக பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே, தருவாயே..

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..
அம்மாவை வணங்காது உயர்வில்லையே..

பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா..?
விலை மீது விலை வைத்து கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாய் அன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேன் அம்மா..
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா..?
உன்னாலே பிறந்தேனே..

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..
அம்மாவை வணங்காது உயர்வில்லையே..
நேரில் நின்று.. பேசும் தெய்வம்..
பெற்ற தாய் அன்றி வேறொன்று ஏது..
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..
அம்மாவை வணங்காது உயர்வில்லையே..
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..
அம்மாவை வணங்காது உயர்வில்லையே..

No comments:

Post a Comment