பூவே இளைய பூவே


Song : Poovae Ilaya Poovae
Movie : Kozhi Koovuthu
Singer : Malaysia Vasudevan
Year : 1982பூவே இளைய பூவே
வரந்தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்குத்தானே !...
எனக்குத்தானே !...

பூவே இளைய பூவே
வரந்தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்குத்தானே !...
எனக்குத்தானே !...

குழல் வளர்ந்து அலையானதே
இரவுகளின் இழையானதே
குழல் வளர்ந்து அலையானதே
இரவுகளின் இழையானதே
விழியிரண்டு கடலானதே
எனது மனம் படகானதே
இளம்பளிங்கு நகம் சேர்த்ததே
நிலவு அதில் முகம் பார்த்ததே

இனிக்கும் தேனே !... எனக்குத்தானே !...

பூவே இளைய பூவே

இளஞ்சிரிப்பு ருசியானது
அதுகனிந்து இசையானது
இளஞ்சிரிப்பு ருசியானது
அதுகனிந்து இசையானது
குயில்மகளின் குரலானது
இருதயத்தில் மழைதூவுது
இருபுருவம் இரவானது
இருந்தும் என்ன வெயில் காயுது

இனிக்கும் தேனே !... எனக்குத்தானே !...

பூவே இளைய பூவே
வரந்தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்குத்தானே !...
எனக்குத்தானே !...
எனக்குத்தானே !......

No comments:

Post a Comment