தமிழ்த்தாய் வாழ்த்து


தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்வாழ்த்து வாழ்த்துப்பாடலை எழுதியவர் மனோன்மணியம் சுந்தரனார் என்பவராவார். இவர் எழுதிய புகழ்ப்பெற்ற நாடக நூலான மனோன்மணியம் நூலில் உள்ள துதிப்பாடலின் ஒரு பகுதி இப்பாடலாகும். இதை 1970ஆம் ஆண்டு தமிழக அரசு இப்பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது.


Play (mp3 link)

பாடல் :

"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!"

பொருள் :

நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு, அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்தியக் கண்டத்தில், தென்னாடும் அதில் சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடானது , பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல, அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருக்கின்ற பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே! இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!

இந்திய தேசிய கீதம்

ஜன கண மன... இந்திய தேசிய கீதமாகும். இப்பாடல் வங்காள மொழியில் இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கவிதை ஒன்றின் தொடக்க வரிகளாகும். இந்த கீதத்தை முழுவதாக பாடுவதற்கு 52 விநாடிகள் பிடிக்கிறது

Play (mp3 link)

பாடல் :

ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
பஞ்சாப சிந்து குஜராத மராத்தா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ சுப நாமே ஜாகே,
தவ சுப ஆஷிஷ மாகே,
ஜாஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.


பொருள் :
மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப்பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,
திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..
விந்திய இமாசல யமுனா கங்கா
மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன..
உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,
உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,
உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்..
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!.

மாயம் செய்தாயோ நெஞ்சை


Song: Mayam Seithayo  
Singers: Sangeetha Rajeshwaran
Music: Vijay Antony
Lyrics: Vivega
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணாய்
எது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ..
ஹோ.. ஹோ..


நானே செடி வளரும் தோட்டம் ஆனேன்
யானை வந்து போன சோலை ஆனேன் ..
காதல் கரை புரண்டு ஓட பார்த்தேன்
தூண்டில் முள் நுனியில் உயிரை கோர்த்தேன்
என்னை செவி கண்டு சிறு வெகு தூரம் விழுந்தேன்
என் பேரை நான் மறந்து கல் போல கிடந்தேன்


மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ..
ஹோ.. ஹோ..


வேர்வை துளி முகத்தில் வைர கற்கள்
அழகை கூற தமிழில் இல்லை சொற்கள்
மீசை முடி கரிய அறுகம் புற்கள்
தாவி மெல்ல கடிக்க ஏங்கும் பற்கள்
உன்னருகில் முள் செடியும் அழகாக தெரியும்
உன்னை விரல் தோன்றுகையில் துரும்பாகும் மலையும்


மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணாய்
எது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ..
ஹோ.. ஹோ..

யம்மா யம்மா காதல் பொன்னம்மா

Song: Yamma Yamma Lyrics
Singer: SPB, Swetha Menon
Music: Harris Jayaraj
Lyrics: Kabilan


யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கை ரேக போல
பெண்ணோட காதல் கை குட்ட போல..
கனவுக்குள்ள அவல வெச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாலே..
புல்லாங்குழல கையில் தந்தாலே..
என் மூச்சுக்காத்த வாங்கி போனாலே..
பொம்பளைய நம்பி.. கெட்டுபோனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும்..
இப்ப கடைசியில் நின்னேன்..
முத்தெடுக்க போனால்..
உன் மூச்சடங்கும் தன்னால்..
காதல் முத்தெடுத்த பின்னல்
மனம் பித்தமாகும் பெண்ணால்..
அவ கையவிட்டுதான் போயாச்சு..
கண்ணு ரெண்டுமே பொய்யாச்சு..
காதல் என்பது வீண் பேச்சு..
மனம் உன்னாலே புண்ணாய் போச்சு..
காதல் பாதை கல்லு முல்லுடா..
அதை கடந்துபோன ஆளே இல்லடா..
காதல் ஒரு போதை மாதிரி
அதை போட்டுகிட்டா மூங்கில் யாத்திரை..
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
ஓட்ட போட்ட மூங்கில், அது பாட்டு பாட கூடும்..
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும், மனம் உன்ன பத்தி பாடும்.
வந்து போனதாறு? ஒரு நந்தவன தேறு..
நம்பி நொந்து போனேன் பாரு. அவ பூ இல்ல நாரு.
என்ன திட்டம் போட்டு நீ திருடாதே..
எட்ட நின்னு நீ வருடாதே,
கட்டெறும்பு போல் நெருடாதே..
மனம் தாங்காதே தாங்காதே
வானவில்லின் கோலம் நீயம்மா,
என் வானம் தாண்டி போனதெங்கம்மா..
காதல் இல்லா ஊரு எங்கடா
என்ன கண்ண கட்டி கூட்டி போங்கடா..
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கை ரேக போல
பெண்ணோட காதல் கை குட்ட போல..
கனவுக்குள்ள அவல வெச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாலே..
புல்லாங்குழல கையில் தந்தாலே..
என் மூச்சுக்காத்த வாங்கி போனாலே..

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..


Song: Amma Endrazhaikaatha  
Singer: K.J.Yesudas
Music: Ilaiyaraaja
Lyrics: Vaali


அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..
அம்மாவை வணங்காது உயர்வில்லையே..
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..
அம்மாவை வணங்காது உயர்வில்லையே..
நேரில் நின்று.. பேசும் தெய்வம்..
பெற்ற தாய் அன்றி வேறொன்று ஏது..
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..
அம்மாவை வணங்காது உயர்வில்லையே..

அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதான் அம்மா..
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நான்தான் அம்மா..
பொருலோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாக பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே, தருவாயே..

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..
அம்மாவை வணங்காது உயர்வில்லையே..

பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா..?
விலை மீது விலை வைத்து கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாய் அன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேன் அம்மா..
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா..?
உன்னாலே பிறந்தேனே..

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..
அம்மாவை வணங்காது உயர்வில்லையே..
நேரில் நின்று.. பேசும் தெய்வம்..
பெற்ற தாய் அன்றி வேறொன்று ஏது..
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..
அம்மாவை வணங்காது உயர்வில்லையே..
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..
அம்மாவை வணங்காது உயர்வில்லையே..

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு

Song : Punjai Undu Nanjai Undu
Movie : Unnal Mudiyum Thambi
Singer : S.P.Balasubramaniam
Year : 1988புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல
எங்க பாரதத்தில் சோத்துச் சண்டை தீரவில்ல
வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கே நாதி இல்ல
சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல
இது நாடா இல்ல வெறும் காடா
இதைக் கேட்க யாரும் இல்லை தோழா
இது நாடா இல்ல வெறும் காடா
இதைக் கேட்க யாரும் இல்லை தோழா

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல
எங்க பாரதத்தில் சோத்துச் சண்டை தீரவில்ல

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது
ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ
வீடின்றி வாசலின்றித் தவிக்குது
எத்தனை காலம் இப்படிப் போகும்
என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்
என்றிங்கு மாறும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல
எங்க பாரதத்தில் சோத்துச் சண்டை தீரவில்ல

ஆத்துக்குப் பாதை இன்று யாரு தந்தது
தானாகப் பாதை கண்டு நடக்குது
காற்றுக்கு பாட்டுச் சொல்லி யாரு தந்தது
தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா
கங்கையும் தெற்கே பாயாதா காவிரியோடு சேராதா
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல
எங்க பாரதத்தில் சோத்துச் சண்டை தீரவில்ல

இது நாடா இல்ல வெறும் காடா
இதைக் கேட்க யாரும் இல்லை தோழா
இது நாடா இல்ல வெறும் காடா
இதைக் கேட்க யாரும் இல்லை தோழா

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா


Song : Pottu Vaitha
Movie : Idhayam
Singer : K.J.Yesudas
Year : 1991பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோரும் தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று எனை சுட்ட நிலா

ஆராத ஆசைகள் தோன்றும் எனை தூண்டும்
ஆனாலும் வாய் பேச அஞ்சும் இந்த நெஞ்சம்
அவள் பேரை நாளும் அசைப் போடும் உள்ளம்
அவள் போகும் பாதை நிழல் போல செல்லும்
மௌனம் பாதி மோகம் பாதி
என்னை கொல்லும் எந்நாளும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோரும் தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று எனை சுட்ட நிலா

யாப்போடு சேராதோ பாட்டு தமிழ்ப் பாட்டு
தோப்போடு சேராதோ காற்று பனிக்காற்று
வினாத் தாள் போல் இங்கே கனா காணும் காளை
விடைப் போலே அங்கே நடை போடும் பாவை
ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும்
பொன்னாள் இங்கு எந்நாளோ

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோரும் தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று எனை சுட்ட நிலா